வாயை மூடி பேசவும், ஒரு நாள் கூத்து மற்றும் வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் தேவ். இதில் வெள்ளை பூக்கள் படத்தில் மறைந்த சின்ன கலைவாணர் விவேக் உடன் இணைந்து கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

2019ல் வெளியான அந்த படம் தற்போது வெளியாகி நான்கு வருடங்களை கடந்துள்ளது. இந்த நிலையில் அந்தப்படம் குறித்தும் அந்த படத்தில் விவேக் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்தும் நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் தேவ்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன என்றாலும் எனக்கு நீங்கா நினைவுகளையும் ஆகச்சிறந்த பாடங்களையும் இந்த படம் பெற்று தந்தது. சின்ன கலைவாணர் விழப்புடன் பணிபுரிந்த அந்த தருணங்கள் விலைமதிப்பற்றவை அவரது சிரிப்பொலிகளும் உரையாடல்களும் இன்றும் என் மனதில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது.

எங்களைப் போன்ற புது முகங்கள் மீது நம்பிக்கை மட்டும் வைக்காமல் அவ்வப்போது தட்டிக் கொடுத்தும் இதை மற்றொரு படமாக இல்லாமல் தனித்துவமான படம் ஆக்கியது

அவருடைய விசாலமான தனது தான். இப்படத்தின் கதாநாயகனாக தான் இருந்த போதிலும் ஒவ்வொரு திரையிடலிலும், படம் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் என்னை முன்னிறுத்தி என் முகத்தை பார்வையாளர்களுக்கு வெளிச்சம் காட்டினார்.

இவை அனைத்தும் அவராக முன்வந்து செய்த செயல்கள், இது அவரின் ஒப்பற்ற குணத்திற்கு சான்றாகும் . இவரின் தன்னலமற்ற செயல்கள், என்னை போன்ற பல இளைஞர்களுக்கு அவர் மரபை பின்பற்ற ஊக்குவிக்கின்றது. என்று கூறியுள்ளார்