நடிகர் சித்தார்த் கடந்த நான்கு வருடங்களாக தமிழில் படங்கள் எதிலும் நடிக்காத நிலையில் இந்த வருடம் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சித்தார்த்.
இதை தொடர்ந்து நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது இரண்டு படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. இதில் கார்த்திக் ஜி கிரிஷ் என்பவர் இயக்கத்தில் டக்கர் என்கிற படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
இன்னொரு பக்கம் விஜய்சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஐபிஎஸ், சிந்துபாத் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இயக்கிய இயக்குனர் அருண்குமார், சித்தார்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு சித்தா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துவரும் நடிகர் கமல்ஹாசன் அங்கிருந்தபடியே இந்த படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார்.
மேலும் சித்தா என்றால் சித்தப்பா என்பதை குறிப்பதாக ஒரு விளக்கத்தையும் அளித்துள்ள கமல், சித்தா படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மூன்று படங்களை தயாரித்துள்ள நடிகர் சித்தார்த், தற்போது இந்த படத்தையும் அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.