V4UMEDIA
HomeNewsKollywoodவிக்ரம் படத்தை தொடர்ந்து லியோவிலும் ஒரு மலையாள வில்லனை இணைத்த லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படத்தை தொடர்ந்து லியோவிலும் ஒரு மலையாள வில்லனை இணைத்த லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வருகிறார். கடைசியாக கமலை வைத்து அவர் இயக்கிய விக்ரம் மிகப்பெரிய வெற்றி படமாகவும் வசூலை வாரிக்குவித்த படமாகவும் மாறியது.

இதனை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி தற்போது விஜய் நடிக்கும் லியோ என்கிற படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை விட இந்த படத்திற்கு இரு மடங்கு வெற்றி கிடைக்க வேண்டுமென கடுமையாக உழைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

அதற்காக பல மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக கடந்த முறை விக்ரம் திரைப்படத்தில் செம்பான் வினோத் என்கிற வில்லன் நடிகரை அழைத்து வந்து நடிக்க வைத்தார். அவரது நடிப்பிற்கும் வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து தற்போது தான் இயக்கி வரும் லியோ படத்திலும் மலையாளத்தில் வில்லன், குணசேத்திர நடிகர், கதையின் நாயகன் என வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஜோஜூ ஜார்ஜை இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இதற்கு முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments