அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக படமாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதில் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியானது. இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் தேவையான நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். அந்த வகையில் இந்த படத்தில் மதுராந்தகர் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் ரகுமான் நடித்துள்ளார்.
தற்போது வரிசையாக பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் தற்போது சிவோகம் என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரகுமான் நடித்துள்ள மதுராந்தகர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
உண்மையிலேயே சோழ அரசின் பட்டத்திற்கு வாரிசுரிமை அடிப்படையில் தேர்வாகி இருக்க வேண்டியவர் மதுராந்தக சோழர் தான். ஆனால் அவரது தாய் செம்பியன் மாதேவியின் விருப்பப்படி அந்த பட்டத்தை கைவிட்டு ஆன்மீக வழியில் திரும்பினார்.
அந்த இடத்தில் சில காலம் அவர் அகோரிகளுடன் நட்பாக இருந்து வாழ்ந்து வந்தார். அதன்பிறகு அவர் அந்த அகோரிகளுடனேயே நாடு திரும்பினார். இதை விவரிக்கும் விதமாக இந்த பாடலை உருவாக்கி உள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.