V4UMEDIA
HomeNewsKollywoodசாந்தனுவை ஆக்சன் ஹீரோவாக்குமா ராவண கோட்டம் ?

சாந்தனுவை ஆக்சன் ஹீரோவாக்குமா ராவண கோட்டம் ?

பல வெள்ளிவிழா படங்களை கொடுத்த இயக்குனர் பாக்கியராஜ் ஒரு நடிகராகவும் ஒரு இயக்குனராகவும் சரிசம அளவில் வெற்றி பெற்று தனது திரையுலக பயணத்தை தொடர்ந்தார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதே சமயம் அவரது மகன் சாந்தனு பாக்யராஜ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் தனக்கென சொல்லிக்கொள்ளும்படியான ஒரு வெற்றியை பெறவில்லை.

அது மட்டுமல்ல இந்த 15 வருடங்களில் அவர் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் ஒரு கமர்சியல் நடிகராக ஒரு ஆக்சன் ஹீரோவாக அடுத்த லெவலுக்கு அவரை அழைத்துச் செல்லும்படியான படங்கள் எதிலும் அவர் நடிக்கவில்லை.

இப்போதுவரை அவர் ஒரு சாக்லேட் பாயாகவே அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறார். ஆனால் தற்போது அவர் நடித்துள்ள ராவண கோட்டம் ட்ரைலரை பார்க்கும்போது இவர் எப்போதோ ஒரு ஆக்சன் ஹீரோவாக ஆகி இருக்க வேண்டியவர் என்று தான் மனதில் தோன்றுகிறது.

தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன், நடிகர் சாந்தனுவுக்கு இந்த படத்தில் அப்படி ஒரு அதிரடி ஆக்சன் கதாபாத்திரம் கொடுத்துள்ளார். ஏற்கனவே இவர் இயக்கிய மதயானை கூட்டம் படத்திலும் அந்த படத்தில் அறிமுகமான நடிகர் கதிரை ஆக்சன் கதாநாயகனாகவே காட்டியிருந்தார்.

அந்த வகையில் இந்த ராவண கோட்டம் படம் சாந்தனுவுக்கு அவரது திரையுலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தும் படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.

Most Popular

Recent Comments