V4UMEDIA
HomeNewsKollywoodசந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படப்பிடிப்பு நிறைவு

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படப்பிடிப்பு நிறைவு

சந்தானம் நடிப்பில் தற்போது கிக், வடக்குப்பட்டி இராமசாமி ஆகிய படங்கள் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றன. ஏற்கனவே சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி தான் வடக்குப்பட்டி ராமசாமி படத்தையும் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி முடித்து புதிய சாதனை படைத்துள்ளனர் வடக்குப்பட்டி ராமசாமி படக்குழுவினர்.

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். வில்லனாக ஜெய்பீம் புகழ நடிகர் தமிழ் நடிக்க முக்கிய வேடங்களில் நடிகர் ஜான் விஜய், எம் எஸ் பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், விஜய் டிவி ஜாக்குலின் உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Most Popular

Recent Comments