Home News Kollywood இன்ஸ்டாகிராமில் இணைந்த விஜய்

இன்ஸ்டாகிராமில் இணைந்த விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை நேரில் வரவழைத்து சந்திப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

அது மட்டுமல்ல சோசியல் மீடியா மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டுமென ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் தனக்கென ஒரு கணக்கு வைத்துள்ளார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் தற்போது முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் நுழைந்து புதிய கணக்கை இன்று முதல் துவங்கியுள்ளார் விஜய்.

இப்போது வரை 3.3 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் நடிகர் விஜய் பின் தொடர்ந்து வருகின்றனர்.