HomeNewsKollywoodஐம்பதாவது நாளை தொட்ட ‘டாடா’

ஐம்பதாவது நாளை தொட்ட ‘டாடா’

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இன்னும் அதிக அளவு ரசிகர்களிடம் பிரபலமானார்.

நட்புன்னா என்னன்னு தெரியுமா என்கிற படத்தின் மூலம் முதன்முதலாக நடிகராகவும் திரையுலகில் நுழைந்த கவின், அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கவின் நடிப்பில் டாடா என்கிற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை ஈ.வி.கணேஷ் பாபு என்பவர் இயக்கியிருந்தார். இதில் கவினுக்கு ஜோடியாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்து நடித்த மலையாள நடிகை அபர்ணா வினோத் நடித்திருந்தார்.

காதல் கதை தான் என்றாலும் ஒரு குடும்பக்கதையாக பீல் குட் படமாக இந்த படம் உருவாகி இருந்தது. அதனால் படம் வெளியான நாளிலிருந்து இந்த படத்திற்கு ரசிகர் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்தது.

சின்ன பட்ஜெட்டில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வசூலை பெற்றதுடன் நடிகர் கவினுக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தி கொடுத்து விட்டது.

அது மட்டுமல்ல இந்த படம் பிடித்துப் போனதால் இதன் இயக்குனர் கணேஷ் பாபுவிற்கு தங்களது நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பை அளித்து லைக்கா நிறுவனம் அவரை கௌரவப்படுத்தியது,.

இந்த நிலையில் இந்த படம் தற்போது ஐம்பதாவது நாளை தொட்டுள்ளது. இதை படக்குழுவினாலும் இந்த படத்தை ரசித்த ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments