வெண்ணிலா கபடி குழு என்கிற வெற்றி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். அதைத்தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டியநாடு, மாவீரன் கிட்டு, ஜீவா என கிட்டத்தட்ட 15 படங்களை இயக்கியுள்ளார் சுசீந்திரன்.

இவர் இயக்கிய முதல் படமான வெண்ணிலா கபடி குழு 2009 இல் தான் வெளியானது என்றாலும் இயக்குனர் சுசீந்திரன் அதற்கு முன்பே சினிமாவில் நுழைந்து 2003இல் வெளியான நாம் என்கிற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதன்பிறகு உதவி இயக்குனராக பணியாற்றி 2009ல் இயக்குனராக புரமோஷன் பெற்றார். அந்த படத்தில் இவர் அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, விமல், விஷ்ணு விஷால், சூரி என நிறைய பேர் இன்று முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.