சமந்தா நடிப்பில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சாகுந்தலம். தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனரான குணசேகர் இயக்கியுள்ள இந்த படம் புராண காவியமான சாகுந்தலம் காவியத்தை தழுவி படமாக்கப்பட்டுள்ளது.


இதில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்க முக்கியமான கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேற்று இந்த படத்தின் 3d டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது..


இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை முதல் நானி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள, திரையரங்குகளில் நாளை முதல் வெளியாக இருக்கும் தசரா படம் ஓடும் திரையரங்குகளில் சேர்த்து வெளியிடப்படுகிறது.


கீர்த்தி சுரேஷை பார்க்க வரும் ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக முக்கிய காட்சிகளால் கோர்க்கப்பட்டுள்ள இந்த சாகுந்தலம் பட ட்ரெய்லரும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பதை சந்தேகம் இல்லை.