நேஷனல் கிரஷ் அதாவது தேசிய அளவில் அனைவரையும் கிறங்கடிப்பவர் என அழைக்கும் அளவிற்கு பெயர் பெற்ற முன்னணி நடிகையாக மாறிவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. குறிப்பாக புஷ்பா படத்திற்கு பிறகு அதில் இவர் ஆடிய சாமி சாமி நடனம் மிகப்பெரிய அளவில் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

தற்போது பாலிவுட்டிலும் நடித்து அங்கேயும் வரவேற்பை பெற்று வருகிறார் ராஷ்மிகா. இந்த வருட துவக்கத்தில் விஜய்யுடன் அவர் ஜோடியாக நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கில் இளம் நடிகர் நிதினுக்கு ஜோடியாக புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தை வெங்கி குடுமுலா இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தின் துவக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்துகொண்டு கிளாப் அடித்து இந்த படத்தை துவங்கி வைத்தார். இந்த படத்தில் ராஜேந்திர பிரசாத், வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர் முக்கிய நேரத்தில் நடிக்கின்றனர்