HomeNewsKollywoodபாரதிராஜா மகனை இயக்குனராக்கிய சுசீந்திரன்

பாரதிராஜா மகனை இயக்குனராக்கிய சுசீந்திரன்

இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிப்பின் மீது உள்ள ஆசையால் சினிமாவிற்குள் நுழைந்தவர். ஆனால் காலம் அவரை இயக்குனர் ஆக்கி அழகு பார்த்தது. ஆனாலும் கடந்த பத்து  வருடங்களாக ஒரு நடிகராகவும் மாறி தனது நடிப்பு தாகத்தை தீர்த்துக் கொண்டதுடன் நல்ல கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார்.

அதேபோல அவரது மகன் மனோஜ் பாரதி தந்தை வழியில் இயக்குனர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டார். அதற்கு ஏற்ற மாதிரி இயக்குனர் மணிரத்தினத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஆனால் பாரதிராஜா அவரை தாஜ்மஹால் படம் மூலம் கதாநாயகன் ஆக்கினார்.

ஆனால் மனோஜ் பாரதியால் நடிப்புத்துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல நடிகன் என்கிற பெயரை பெற்று விட்டார். இந்த நிலையில் அவரது நீண்ட நாள் கனவான டைரக்சன் துறையில் அடி எடுத்து வைத்துள்ளார் மனோஜ் பாரதி.

இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் படத்தில் தான் மனோஜ் பாரதியை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அது மட்டுமல்ல அவரது தந்தை பாரதிராஜாவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றபடி இந்த படத்தில் புது முகங்கள் தான் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளதுடன் இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

அதுமட்டுமல்ல தனது குருநாதர் மணிரத்னத்திடம் சென்று ஆசியும் பெற்று வந்துள்ளார் மனோஜ் பாரதி.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments