விஜய் – லோகேஷ் கனகராஜ் என்கிற ஹிட் காம்பினேஷனில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக உருவாகி வரும் படம் லியோ. இந்த படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் காஷ்மீரில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சிறிய இடைவெளி விட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பாக தற்போது காஷ்மீரிலேயே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது நேற்று இரவு திடீரென லியோ படக் குழுவினர் தங்கி இருந்த பகுதியில் மெல்லிய நில அதிர்வு ஏற்பட்டது. படக்குழுவினர் தங்கி இருந்த அறையில் நடுக்கம் ஏற்பட அவர்கள் அனைவரும் பயந்து போய் ஹோட்டலுக்கு வெளியே வந்து நின்றுவிட்டனர்.

சில மணி நேரங்களுக்கு பிறகு நிலநடுக்கத்திற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படாததால் மீண்டும் ஹோட்டலுக்குள் சென்றனர். அதன்பிறகு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு தகவலையும் வெளியிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்தி உள்ளனர்.