நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விப்பணிக்காக அகரம் பவுண்டேஷன் என்கிற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் அவரது தம்பி நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை நடத்தி நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.


இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. தற்போது வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றி.


அறிவித்துள்ள திட்டங்களில் தங்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை உழவர்கள் முழுமையாய் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


தமிழக அரசின் திட்டங்களை இவ்வளவு தெளிவாக விவசாயிகள் மத்தியில் எடுத்து கூறிய கார்த்திக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் மு க ஸ்டாலின், “அன்பின் கார்த்திக்கு.. உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்! உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் ‘சொல்ல மாட்டேன்’; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண ‘செயலாற்றுவோம்’! என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.