தமிழ் திரை உலகில் பாடலாசிரியராக கிட்டத்தட்ட 1000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளவர் பாடலாசிரியர் பா விஜய். ஆனாலும் இவருக்குள் ஒரு நடிகனும் ஒரு இயக்குனரும் ஒளிந்து கொண்டுள்ளார்கள் என்பது பின்னர் தான் தெரியவந்தது.

அந்த வகையில் ஸ்ட்ராபெரி, ஆருத்ரா என்று இரண்டு படங்களை இயக்கியுள்ளார் பா.விஜய். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மேதாவி என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக ராசி கண்ணா நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கடந்த 2020லேயே இந்த படத்தின் துவக்க விழா நடைபெற்றாலும் கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த படம் உருவாக தாமதமானது.

சமீபகாலமாக வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று பட்டியலிடப்பட்டிருகிறது.

இதற்கான பிரத்யேக தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசும்போது இந்த தகவலை வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளியிட்டார் .