யூட்யூபில் விமர்சகராக பெயர் பெற்ற ராஜ்மோகன் பாபா பிளாக் ஷீப் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். குழந்தைகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை இவர் உருவாக்கியுள்ளார். இதில் கதையின் நாயகியாக அம்மா கதாபாத்திரத்தில் விருமாண்டி புகழ் நடிகை அபிராமி நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க இந்த படத்தை அவரே தாங்கிப் பிடித்துள்ளார் என்று படக்குழுவினர் அவரது நடிப்பை பாராட்டுகின்றனர். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு பற்றி இயக்குனர் ராஜ்மோகன் கூறும் போது படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல், என்னிடம் கருத்து கேட்டு, அவரது கதாப்பாத்திரத்தை அட்டகாசமாக திரையில் கொண்டு வந்துள்ளார்.

மிகவும் உணரச்சிகரமான ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்து, மொத்த படக்குழுவும் கண்கலங்கி எழுந்து கை தட்டியது. அந்த காட்சியை ரசிகர்கள் திரையில் பார்க்கும்போது, கண்டிப்பாக அவர்களும் கண்கலங்குவார்கள். இப்படம் நடிகை அபிராமிக்கு மீண்டும் திரையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மதுரை முத்து, RJ விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு,சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட் போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன