சமீபத்தில் நடைபெற்ற ஹன்சிகாவின் திருமணத்தை தொடர்ந்து முதல் முறையாக அவர் நடித்த லவ் சாதி டிராமா என்கிற வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டாறில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 17ஆம் தேதி இதன் கடைசி எபிஸோட் ஒளிபரப்பானது.
இந்த நிலையில் இதில் இடம்பெற்றுள்ள அருமையான “துணை வருவேன்” பாடல், ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை விருது பெற்ற பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஜஸ்லீன் ராயல் இசையமைத்துப் பாடியுள்ளார்.
இந்த பாடலில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வுகளின் சில பகுதிகள் மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்தப் பாடல் ஹன்சிகாவுக்கு ஒரு அழகான திருமண பரிசாக உருவாக்கப்பட்டது.
மேலும் திருமண வாழ்க்கை என்ற மகிழ்ச்சியான புதிய அத்தியாயத்தில் நுழையும் தம்பதிகளின் காதல் காத்திருப்பு, மற்றும் அவர்கள் திருமணத்தோடு துவங்கவுள்ள புதிய பயணத்தையும் மிகச்சிறப்பாக இந்த பாடல் சித்தரிப்பதால் இதற்கென்று ஹன்சிகாவின் திருமண சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் இணைத்துள்ளனர்.