மறைந்த எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் படமானால் எப்படி இருக்கும் என்கிற வாசகர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக இயக்குனர் மணிரத்னம் அந்த நாவலை அப்படியே படமாக்கினார். அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.
நாவலில் கூறப்பட்டிருந்த அத்தனை கதாபாத்திரங்களுக்கும் மிக பொருத்தமான பிரபல முன்னணி நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்து ஒரு விஷுவல் ட்ரீட்டாக இந்த படத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் மணிரத்னம். இந்த படத்தின் முதல் பாதத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்திற்கான புரமோஷன் பணிகளை பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினர் துவங்கி விட்டனர். அந்த வகையில் இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக ‘அகநக’ என்கிற பாடல் வரும் மார்ச் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த பாடல் குந்தவையாக நடித்த திரிஷாவுக்கும் வந்திய தேவனாக நடித்த கார்த்திக்கும் இடையிலான பாடல் என்பது தற்போது வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது தெரிகிறது.