தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகரான நாகார்ஜுனாவின் வாரிசாக களம் இறங்கியவர் தான் நடிகர் நாகசைதன்யா. துவக்கத்தில் காதல் படங்களிலும் பின்னர் ஆக்சன் படங்களிலும் நடித்து ஓரளவுக்கு தன்னை நிரூபித்தார். இந்த ஒல்லியான உடம்பை வைத்துக்கொண்டு இவ்வளவு ஆக்சன் காட்டுகிறாரே என்று ரசிகர்கள் அவரை வியந்து பார்த்தனர்.
இருந்தாலும் இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல ஒரு பக்கா கமர்சியல் ஆக்சன் ஹீரோவாக அவரை தற்போது, தான் இயக்கி வரும் கஸ்டடி படத்தின் மூலம் மாற்றி காட்டியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
ஆம் தெலுங்கில் முதன்முறையாக நுழைந்துள்ள வெங்கட் பிரபு நாகசைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் கஸ்டடி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
இதில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க, முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடித்துள்ளார்.
இந்த படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது. டீசரை பார்க்கும் ரசிகர்கள் படத்தை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ளும் விதமாக இந்த டீசரை பக்காவாக உருவாக்கியுள்ளார் வெங்கட் பிரபு.
அரவிந்த்சாமியின் வில்லத்தனமும் நாக சைதன்யாவின் அதிரடியும் கலந்து இது இன்னொரு தனி ஒருவனாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பது டீசரை பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடிகிறது. இனி மெயின் பிக்சர் வரும்போது பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.