சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் சாகுந்தலம். புராண படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான குணசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். சமந்தாவை பொறுத்தவரை தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் எதையும் தவிர்க்க மாட்டார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புவரை உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த சமந்தா, தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் தனது படங்களின் படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சாகுந்தலம் படத்தை பார்த்துவிட்டு அதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் சமந்தா.

இதனை அடுத்து நேற்று படத்தின் நாயகன் தேவ்மோகன், இயக்குனர் குணசேகர் உள்ளிட்ட படக்குழுவினர் சிலருடன் ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸில் இருக்கும் பெத்தம்மா தள்ளி கோவிலுக்கு சென்று வழிபட்டார் சமந்தா.

அதனைத் தொடர்ந்து அதே உடையுடன் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்து சமந்தா கிளம்பிச்சென்ற வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.