HomeNewsKollywoodவாத்தி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது

வாத்தி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது

பெரும்பாலும் இயக்குனர்களை பொறுத்தவரை கதைக்கு தேவை என்று தான் தாங்கள் எழுதி வைத்த காட்சிகளை படமாக்குவார்கள். ஆனால் சில நேரங்களில் கதையின் சூழலுக்கு ஏற்ப படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே மீண்டும் அதே காட்சியை வேறு விதமாகவும் படமாக்க வேண்டி இருக்கும்.

அது மட்டுமல்ல, ஏற்கனவே எடுக்கப்பட்ட சில காட்சிகளை படத்தின் நீளம் கருதி வெட்டி ஒதுக்கி வைக்க வேண்டிய நிலைமையும் எல்லா இயக்குனர்களும் சந்திக்க கூடிய ஒன்றுதான். ஆனால் அவையெல்லாம் ரசிகர்களின் பார்வைக்கு வராமலேயே போய் விடக்கூடாது என்பதற்காக படம் வெளியான பிறகு தாங்கள் எடுத்து டெலீட் செய்த காட்சிகளை சோசியல் மீடியாவிலும் யூட்யூப் தளத்திலும் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அப்படி விஜய் நடித்த வாரிசு படத்திற்கு கூட இதுபோன்று சில டெலீட் செய்யப்பட்ட காட்சிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகின.

இந்த நிலையில் கடந்த மாதம் தனுஷ் நடிப்பில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியான வாத்தி படத்தின் முழு வீடியோ பாடல்கள் கடந்த சில நாட்களாக ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வாத்தி படத்தில் அப்படி ஏற்கனவே எடுக்கப்பட்டு படத்தில் இடம்பெறாத சில காட்சிகளை இன்று 6:00 மணிக்கு வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களால் அதை அளவில் பார்க்கப்பட்டு வைரலாகி வருகின்றன.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments