இந்த வருடம் வெளியாகும் விக்ரமின் மூன்று படங்கள்
முன்பெல்லாம் நடிகர் விக்ரம் ஒரு படத்தை நடித்து முடித்த பின்பெ அதற்கடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார். குறிப்பாக கந்தசாமி. அந்நியன் மற்றும் ஐ போன்ற படங்களில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை ஒவ்வொரு படத்திற்கும் ஒதுக்கிய வரலாறும் உண்டு.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தான் அடுத்தடுத்த படங்களில் ஒப்புக்கொண்டு மீண்டும் முனைப்போல பிசியான நடிகராக மாற ஆரம்பித்துள்ளார் விக்ரம். இதில் பொன்னியின் செல்வன் படத்திற்கு நிறைய நாட்கள் ஒதுக்கினாலும் கடந்த வருடத்தில் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின.
இந்த வருடத்தில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து முடிவடைந்த நிலையில் இருக்கும் துருவ நட்சத்திரம் படமும் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பும் 75% நிறைவடைந்து விட்டது. பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படமும் இந்த வருடத்திற்குள்ளேயே ரிலீஸ் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த வருடம் நடிகர்களை பொருத்தவரை ஜெயம் ரவியை தொடர்ந்து விக்ரமுக்கு தான் அதிக படங்கள் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.