HomeNewsKollywoodலோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் ; உற்சாகத்தில் லியோ படக்குழு

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் ; உற்சாகத்தில் லியோ படக்குழு

மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் – லோகேஷ் கனகராஜ் இணைந்து இருப்பதால் லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவின் முகமாக தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இன்று அவரது பிறந்தநாள். இதை முன்னிட்டு லோகேஷ் கனகராஜுக்கு திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக லியோ பட குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

படத்தின் நாயகி திரிஷா, லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சஞ்சய் தத்துடனும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

மேலும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜெகதீஷ், லோகேஷ் கனகராஜ் இடம் பெற்றுள்ள ஒரு புகைப்படமும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments