தமிழ் திரை உலகில் பாடல்களால் கவனம் ஈர்க்கும் பல இசையமைப்பாளர்கள் மத்தியில் பின்னணி இசையால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் குறிப்பாக விக்ரம் வேதா படத்தில் அவரது பின்னணி இசை மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தது.
அந்த படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் துபாயில் வருடம் தோறும் நடைபெறும் இபா என்கிற சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாக்குழு இந்த வருடத்தின் சிறந்த இசையமைப்பாளராக சாம் சி.எஸ்ஸுக்கு இபா விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
வரும் மே மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் சாம் ஸி.எஸ்ஸுக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.