V4UMEDIA
HomeNewsKollywoodதற்கொலை எண்ணத்தை மாற்ற வரும் யோசி திரைப்படம்

தற்கொலை எண்ணத்தை மாற்ற வரும் யோசி திரைப்படம்

செய்தித்தாள்களில் அடிக்கடி தினசரி தவறாமல் நாம் படிக்கும் செய்திகளில் நிச்சயம் இரண்டு தற்கொலை செய்திகளாவது இடம் பெற்று விடும். தற்கொலை எண்ணம் என்பது கண நேரத்தில் எடுக்கும் ஒரு முடிவு. அந்த சில வினாடிகளை சாதுரியமாக கடந்து விட்டால் நிச்சயமாக தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு விடலாம் என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் யோசி.

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவன் ஒருவன் மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறான்.

அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த மாணவனால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

பிரபல நடிகைகள் ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி இருவரும் பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். அதற்கு காரணமும் உண்டு இவர்களின் உறவுக்காரரான அபய் என்பவர் தான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்

கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நாயகன் அவை கூறும்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராமக்கல் மெட்டு மலைப்பகுதியில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் எந்த வசதிகளும் இல்லாத அந்த மலைப்பகுதியில் தினசரி நான்கு கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தினோம். அடர்ந்த காடு, வனவிலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

முக்கியமான ஒரு காட்சியில் செங்குத்தான மலைப்பகுதியில் நான் கீழ்நோக்கி ஓடி வரும்போது திடீரென கால் தவறி சரிவில் உருண்டு மரத்தில் மோதி எனது நெஞ்சில் பலத்த அடி விழுந்தது . ஆனாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்” என்றார்.

Most Popular

Recent Comments