உணர்வுபூர்வமான படங்களை எடுப்பதற்கு பெயர் பெற்றவரான இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார். இந்த படத்தில் முன்னணி கதாநாயகன் என யாரும் இல்லாவிட்டாலும் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை மிக குறுகிய நாட்களிலேயே முடித்துவிட்டார் தங்கர் பச்சான். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல் வெளியிட்டுள்ளார்.
கமலின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இயக்குனர் தங்கர் பச்சான், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி பாலன் குறித்து தங்கர் பச்சான் கூறும்போது, அவர் தென்னிந்தியாவின் நந்திதா தாஸ் என பாராட்டி இருந்தார்.
அவர் 20 வருடங்களுக்கு முன்பு இயக்கிய அழகி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நந்திதா தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.