HomeNewsKollywoodஜெயிலர் பட இயக்குனருக்கு பாலிவுட் நடிகர் அளித்த சர்ப்ரைஸ் கிப்ட்

ஜெயிலர் பட இயக்குனருக்கு பாலிவுட் நடிகர் அளித்த சர்ப்ரைஸ் கிப்ட்

விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என தமிழுக்கு மிகவும் தெரிந்த நடிகர்கள் இருந்தாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், மலையாளத்தில் இருந்து மோகன்லால், தெலுங்கில் இருந்து காமெடி நடிகர் சுனில், இந்தியிலிருந்து நடிகர் ஜாக்கி ஷெராப் என ஒவ்வொரு மொழிகளிலும் பிரபலமான நடிகர்களையும் இந்த படத்தில் நடிக்க வைத்து வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

இந்த நிலையில் அவரது டைரக்ஷனை பாராட்டி நடிகர் ஜாக்கி ஷெராப் ஒரு ஸ்கூட்டர் ஒன்றை நெல்சனுக்கு பரிசாக கொடுத்துள்ளார். தமிழில் குறைந்த அளவிலேயே படங்களின் நடித்துள்ள ஜாக்கி ஷெராப் ஆரண்ய காண்டம், விஜய் நடித்த பிகில் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் தான் நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப்பையே அசத்தும் விதமாக நெல்சனின் டைரக்ஷன் அமைந்துவிட்டதற்காகத்தான் இந்த கிப்ட் அவருக்கு பரிசாக கிடைத்துள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments