கடந்த சில வருடங்களாகவே கவனித்து பார்த்தால் நடிகை வரலட்சுமி சரத்குமார் வருடத்திற்கு குறைந்தது 5 படங்களாவது கொடுத்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இது தமிழ் மட்டுமல்ல.. மலையாளம், தெலுங்கு, என அனைத்து மொழிகளிலும் சேர்த்து தான். தெலுங்கிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் கூட பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ஹா ரெட்டி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். இந்த நிலையில் வரும் மார்ச் பத்தாம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் அவர் நடித்துள்ள கொன்றால் பாவம் என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை தயாள் பத்மநாபன் என்பவர் இயக்கியுள்ளார்.

அதேசமயம் தற்போது திடீரென ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் துவங்கப்பட்ட கன்னித்தீவு என்கிற படமும் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.

ஆனால் தியேட்டர்களில் அல்ல நேரடியாகவே டிவியில் ஒளிபரப்பாகிறது. வரும் மார்ச் எட்டாம் தேதி உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

இந்த படத்தில் வரலட்சுமி தவிர நடிகைகள் ஆஸ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் சுபிக்ஷா என 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.