தமிழ் சினிமாவில் தற்போது சின்ன படங்களாக வெளியானாலும், பல படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மிகப்பெரிய வெற்றியையும் பெறுகின்றன. இன்னொரு பக்கம் வரும் மாதத்தில் இருந்து சம்மர் விடுமுறை ஆரம்பிக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய படங்களும் வரிசை கட்டி ரிலீஸ் ஆக இருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது தமிழ் நடிகைகளில் முன்னணி வரிசைக்கு முன்னேறி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்தடுத்து வரும் 35 நாட்களுக்குள் மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள அகிலன் திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது.

சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் அவர் இணைந்து நடித்துள்ள பத்து தல படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ஜோடியாக அவர் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படி பிரியா பவானி சங்கர் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாவது ஆச்சரியமான விஷயம் தான்.
அதேபோல கடந்த இரண்டு வருடங்களாக படங்களே இல்லாமல் இருந்த நடிகர் கௌதம் கார்த்திக்கிற்கும் இதேபோன்று ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகின்றன.

அதில் ஒன்று ஏற்கனவே குறிப்பிட்டபடி சிம்புவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பத்து தல திரைப்படம். அந்தப் படத்தில் சிம்புவுக்கு சமமான கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
அதே போல கௌதம் கார்த்திக் சோலோ கதாநாயகனாக நடித்து ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 1947 ஆகஸ்ட் 16 என்கிற படமும் பீரியட் படமாக வித்தியாசமான கதைக்களத்தில் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படங்கள் ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக்கை மேலும் திரையுலகத்தில் அடுத்த படியை நோக்கி நகர்த்தி சொல்லும் என நிச்சயமாக நம்பலாம்.