HomeNewsKollywoodஅதிரடி கதாபாத்திரத்தில் அஜித் பட நாயகியின் 50வது படம்

அதிரடி கதாபாத்திரத்தில் அஜித் பட நாயகியின் 50வது படம்

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் எழில் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ராஜா என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பிரியங்கா திரிவேதி. தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம் படத்தில் முதன்முறையாக தமிழில் நடித்திருந்த நடிகர் திலீப்புக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் இந்த பிரியங்கா திரிவேதி.

இதைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்த இவர் கன்னட இயக்குனரும் நடிகருமான உபேந்திராவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது ஐம்பதாவது படமாக உருவாகி உள்ளது டிடெக்டிவ் தீக்ஷனா.

இந்த படத்தை இயக்குனர் ரகு என்பவர் இயக்கி உள்ளார். அஜித் படத்தில் பார்த்த அப்பாவி நாயகியா இவர் என ஆச்சரியப்பட வைக்கும் விதமாக அதிரடி டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரியங்கா திரிவேதி.

இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் பிரியங்காவின் சொந்த மொழியான பெங்காலி ஆகியவற்றில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இன்று இயக்குனர் கூறியுள்ளார்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியங்கா திரிவேதி கூறும்போது, “படத்தின் இயக்குனர் ரகு கடின உழைப்பாளி. நான் ஏற்கனவே அவருடன் பணியாற்றியிருக்கிறேன், அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரியும். படத்தின் கதையை என்னிடம் சொன்னபொழுது . இதுவரை யாரும் செய்திடாத கதாபாத்திரமாக எனக்கு தோன்றியது எனவே நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இப்படிப்பட்ட சூப்பர் ஹீரோ ஆக்‌ஷன் படம் செய்ய ஃபிட்டாக இருக்க வேண்டும்.

கதாபாத்திரத்தின் உடல் மொழி, சின்ன சின்ன நுணுக்கமான விசயங்கள் கூட பார்த்து பார்த்து செய்திருக்கிறோம். இந்த கதாபாத்திரம் சக்திவாய்ந்த, அறிவார்ந்த, துணிச்சலான பெண்களை பிரதிபலிக்கிறது.

இது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும், குறிப்பாக ஆண் ஹீரோக்களைப் பார்க்கும் பெண்கள் இப்போது பெண் சூப்பர் ஹீரோக்களை ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா”’வில் பார்க்கலாம். பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும், துணிச்சலானவர்களாகவும் இருக்க முடியும் என்பதையும், ஆண்களைப் போலவே குற்றங்களைத் தீர்க்க முடியும் என்பதையும் இந்தப்படம் சொல்கிறது. இது நிச்சயமாக புதுவிதமான அனுபவத்தை தரும். என்று கூறியுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments