சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தங்கலான். இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக பா.ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றுகிறார் நடிகர் விக்ரம்.
கதாநாயகிகளாக பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கோலார் தங்க வயல் பின்னணியில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து ஒரு பீரியட் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
அது மட்டுமல்ல இந்த படத்திற்காக முதன்முறையாக பா.ரஞ்சித்துடன் கைகோர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். இந்த படத்திற்காக தற்போது மூன்று பாடல்களை உருவாக்கியுள்ளதாக ஒரு புதிய அப்டேட் தகவலை ஜி.வி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு எப்போதெல்லாம் தனக்கு மனதில் ட்யூன்கள் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் பா.ரஞ்சித்தின் பாடலாசிரியர்கள் தன்னைச்சுற்றி அருகிலேயே இருப்பதால் உடனுக்குடன் அற்புதமான பாடல் வரிகளை எழுதிக் கொடுத்து விடுகின்றனர் என்றும் கூறியுள்ளார் ஜி,வி.பிரகாஷ்.