HomeNewsKollywoodமே மாதம் வெளியாகிறதா துருவ நட்சத்திரம் ?

மே மாதம் வெளியாகிறதா துருவ நட்சத்திரம் ?

இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைந்து பணியாற்ற அத்தனை ஹீரோக்களும் விரும்புவார்கள். ஆனால் ஏனோ விஜய் போன்ற சில ஹீரோக்கள் அவருடன் இணைந்து பணியாற்றுவதாக அறிவிப்பு வெளியானாலும் மேற்கொண்டு சில காரணங்களால் அவை கைவிடப்பட்டன. அதேபோல சூர்யாவுக்கு இரண்டு ஹிட் படங்களை கொடுத்த கௌதம் மேனன் அடுத்ததாக அவரை வைத்து துருவ நட்சத்திரம் என்கிற படத்தை ஆரம்பிப்பதாக அறிவித்தார்.

ஆனால் இடையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இருவருக்குமான கருத்து வேறுபாடு காரணமாக அந்த படமும் கைவிடப்பட்டது. பின்னர் அதே படத்தை நடிகர் விக்ரமை வைத்து இயக்க ஆரம்பித்தார் கௌதம் மேனன். அந்த படம் ரொம்பவே மெதுவாக வளர்ந்து அதே சமயம் படப்பிடிப்பு முடிவடைந்தும் விட்டது.

அந்த படம் வெளியாவதற்குள் விக்ரம் பொன்னியின் செல்வன், மகான் ஆகிய படங்களை நடித்து வெளியிட்டும் விட்டார். இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படம் வரும் மே மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படம் வெளியானால் வரும் ஏப்ரலில் வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்துடன் சேர்ந்து இந்த படமும் விக்ரமின் மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments