V4UMEDIA
HomeNewsKollywoodகாஷ்மீர் படப்பிடிப்பு முடிந்து திரும்பிய விஜய் த்ரிஷா

காஷ்மீர் படப்பிடிப்பு முடிந்து திரும்பிய விஜய் த்ரிஷா

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இன்னொரு அதிரடி படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜும் நடிகர் விஜய்யும் கூட்டணி சேர்ந்துள்ளனர். லியோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வருகிறார்.

முக்கிய வேடங்களில் நடிகைகள் பிரியா ஆனந்த், அபிராமி வெங்கடாசலம், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது. கடும் குளிரில் தொடர்ந்து பல நாட்கள் நடந்து வந்த இந்த படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமானதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளனர் படக்குழுவினர். விஜய், திரிஷா இருவரும் சென்னை திரும்பும்போது விமானத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Most Popular

Recent Comments