நடிகர் ஜெயம் ரவி, தான் அறிமுகமான முதல் படத்தில் இருந்து இப்போது வரை எந்தவித சரிவுகளும் பெரிய அளவில் பாதிக்காமல் தனக்கென தமிழ் திரை உலகில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் கடந்த வருடம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் மிக முக்கிய கதாபாத்திரமான அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் மிகப்பெரிய அளவில் தனது ரசிகர் வட்டத்தை விரிவாக்கி உள்ளார் என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் இதற்கு அடுத்ததாக அவர் ஏற்கனவே நடித்து வந்த அகிலன் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து பூலோகம் என்கிற ஹிட் படத்தை கொடுத்த கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கடலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிங் ஆப் தி இந்தியன் ஓசன் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார் ஏப்ரல் மாதம் ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

















