இயக்குனர் அமீர் தற்போது படம் இயக்குவதை சற்று தள்ளி வைத்துவிட்டு உயிர் தமிழுக்கு என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் தயாராகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதம்பாவா இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தனது வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் வெளியிடுகிறார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் ஓட்டு கேட்டு ஓடி வருவான் என்கிற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த படம் முழுவதும் அரசியல் களம் என்பதால் படத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது போல இந்த பாடல் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடலை இன்று இயக்குனரும் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் நடைபெறுவதால் அதில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்காக தேர்தல் பிரச்சார பாடலாக இந்த பாடலை பயன்படுத்திக் கொள்ள சமர்ப்பிக்கின்றோம் என்று கூறியுள்ளார் அமீர்.