V4UMEDIA
HomeNewsKollywoodபார்டரை தாண்ட முடியாமல் தொடர் தடங்கலில் சிக்கிய அருண்விஜய் படம்

பார்டரை தாண்ட முடியாமல் தொடர் தடங்கலில் சிக்கிய அருண்விஜய் படம்

கடந்த வருடம் தியேட்டர்களில், ஓடிடியில் படங்கள், வெப்சீரிஸ் என்று பிஸியான வருடமாக நடிகர் அருண்விஜய்க்கு அமைந்தது. யானை, தமிழ் ராக்கர்ஸ், சினம் உள்ளிட்ட படங்கள் அருண்விஜய் நடிப்பில் வெளியாகின.

இந்த நிலையில் ஏற்கனவே குற்றம் 23 படத்தில் இணைந்து வெற்றி கூட்டணியாக மாறிய இயக்குனர் அறிவழகன்-அருண்விஜய் கூட்டணியில் உருவான பார்டர் திரைப்படம் கடந்த வருடமே வெளியாவதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

ஆனால் கடந்த வருடத்திலேயே மூன்று முறை ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டு இந்த வருடம் பிப்ரவரி 24ஆம் தேதி பார்டர் வெளியாகும் என உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இந்த படம் பிப்ரவரி 24ல் வெளியாகவில்லை என்றும் அடுத்த மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அருண்விஜய்யின் படங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த பார்டர் திரைப்படம் மட்டும் தொடர்ந்து ஏதாவது தடங்கல்களை சந்தித்துக்கொண்டு அதன் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போவது திரையுலகில் மட்டுமல்ல ரசிகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது அடுத்த மாதமாவது பார்டர் திரைப்படம் நிச்சயம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular

Recent Comments