V4UMEDIA
HomeNewsKollywoodஸ்மார்ட் போனை வைத்து விளையாட்டு காட்ட தயாராகும் மிர்ச்சி சிவா - மாகாபா

ஸ்மார்ட் போனை வைத்து விளையாட்டு காட்ட தயாராகும் மிர்ச்சி சிவா – மாகாபா

மிர்ச்சி சிவா படங்கள் என்றாலே காமெடியும் கலாய்ப்பும் சேர்ந்து களைகட்டும். இதில் கூடவே விஜய் டிவி மாகாபாவும் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்.. அப்படி ஒரு காம்பினேஷனில் தற்போது உருவாகியுள்ள படம் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்.

இந்த படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார், முக்கிய வேடங்களில் மொட்ட ராஜேந்திரன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், இந்த படத்தை விக்னேஷ் ஷா என்பவர் இயக்கியுள்ளார், தற்போது இந்த படம் குறித்து டீசர் ஒன்று வெளியாகி உள்ளது.

ஸ்மார்ட் போன் ஒன்று ஒரு விஞ்ஞானியால் உருவாக்கப்பட்டு அது எப்படியோ சிவாவின் கைகளுக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து அந்த ஸ்மார்ட் போனால் ஏற்படும் பிரச்சனைகளும் குழப்பங்களும் தான் படத்தில் கதையை நகர்த்திச் செல்லும் என்பது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது. நிச்சயமாக ஒரு கலாட்டாவான மொத்த படத்திற்கு இந்த படம் உத்தரவாதம் தரும் என்பது இந்த டீசரிலேயே தெரிகிறது.

Most Popular

Recent Comments