V4UMEDIA
HomeNewsKollywoodமீண்டும் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடிக்கும் தணல்

மீண்டும் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடிக்கும் தணல்

அதர்வா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பட்டத்து அரசன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த அளவிற்கு வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் அதர்வா நடிப்பில் தற்போது தணல் என்கிற புதிய படம் உருவாகிறது. ஏற்கனவே 100, ட்ரிக்கர் போன்ற படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருந்த அதர்வா மீண்டும் இந்த படத்தில் ஒரு அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க, முதன்முறையாக இந்த படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுக்கிறார் இயக்குனர் நடிகர் அஸ்வின் காக்குமானு. அது மட்டுமல்ல ஷாரா, பரணி, செல்வா, அழகம்பெருமாள், போஸ் வெங்கட், லட்சுமி பிரியா என இன்னும் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்ட நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அன்னை பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் எம் ஜான் பீட்டர் தயாரித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அதனுடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட இருக்கிறது.

Most Popular

Recent Comments