V4UMEDIA
HomeNewsKollywoodராம்சரண் படப்பிடிப்பை மீண்டும் துவங்கிய ஷங்கர்

ராம்சரண் படப்பிடிப்பை மீண்டும் துவங்கிய ஷங்கர்

இயக்குனர் ஷங்கரை பொருத்தவரை கடந்த 30 வருடங்களில் ஒரு நேரத்தில் ஒரு படம் இயக்குவது என்பதை மட்டுமே கொள்கையாக வைத்துள்ளார். அப்படியே அந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்து விட்டாலும், அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து அடுத்த படத்தை அறிவித்து இயக்குவது தான் அவரது வழக்கம். அப்படித்தான் இந்தியன் 2 படத்தையும் அவர் ஆரம்பித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு கிட்டத்தட்ட தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றே சொல்லலாம்.

அதனால் தான் அவர் தெலுங்கில் முன்னணி நடிகர் ராம்சரணை வைத்து தனது அடுத்த படத்தை அறிவித்து அந்த வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நடைபெற்ற நிலையில் தான், இங்கே கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்தது.

இதனால் இந்தியன் 2 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்ததுடன் உடனே அந்த படப்பிடிப்பை மீண்டும் துவங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களையும் மாறிமாறி இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர் அதற்கு ஏற்ப ஆர்ஆர்ஆர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக எப்போதெல்லாம் ராம்சரண் வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தாரோ அந்த சமயத்தில் இங்கே இந்தியன்-2 படப்பிடிப்பை நடத்தி வந்தார் ஷங்கர்.

அதேபோல இங்கே கமலுக்கு வேலைகள் இருந்த சமயத்தில் ராம்சரணை வைத்து, விட்ட இடத்தில் இருந்து படப்பிடிப்பை தொடர்ந்தார். இப்படி மாறிமாறி இந்த இரண்டு படங்களையும் இயக்கி வந்த ஷங்கர் கடந்த வாரம் கூட ஆந்திராவில் திருப்பதிக்கு அருகில் உள்ள இடத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 பட காட்சிகளை படமாக்கினார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ராம்சரண் படத்தை கையில் எடுத்துள்ள இயக்குனர் ஷங்கர், தற்போது ஹைதராபாத்தில் சார்மினார் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்கி நடத்தி வருகிறார். உண்மையிலேயே ஷங்கருக்கு இத்தனை வருட திரையுலக பயணத்தில் இது ஒரு புது அனுபவமாகத்தான் இருக்கும் என்பதை சந்தேகமே இல்லை.

Most Popular

Recent Comments