V4UMEDIA
HomeNewsKollywoodநடிகையுடன் திருமண நிச்சயதார்த்தம் உண்மையா ? ; பிரபாஸ் தரப்பில் விளக்கம்

நடிகையுடன் திருமண நிச்சயதார்த்தம் உண்மையா ? ; பிரபாஸ் தரப்பில் விளக்கம்

பாகுபலி படத்தை தொடர்ந்து இந்திய அளவில் அனைவராலும் விரும்பப்படும் நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். கிட்டத்தட்ட 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாமல் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலராக வலம் வருகிறார்பிரபாஸ். அதனாலயே அவருடன் படத்தில் நடிக்கும் சக நடிகைகளுடன் அவருக்கு காதல் இருப்பதாகவும் அவர்களை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது.

இதற்கு முன்னதாக பாகுபலி படத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுஷ்கா இவ்வாறு அவருடன் காதல், கல்யாணம் என கிசுகிசுக்கப்பட்டார். இந்தநிலையில் தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற படத்தில் நடிக்கும் பிரபாஸ் அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை கீர்த்தி சனான் என்பவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

அதை அப்போது பிரபாஷும் மறுத்தார். நடிகை கீர்த்தி சனான் சொன்னாலும் அதுகுறித்து மறுப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக ஒரு செய்தி வெளியாகி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்தநிலையில் இது தொடர்பாக பிரபாஸின் நெருங்கிய நட்பு வட்டாரம் விளக்கமளித்து பேசுகையில், ” இந்த செய்தி முற்றிலும் பொய். இந்த செய்தியில் உண்மை இல்லை. இது வதந்தி. இவர்கள் இருவரும் ‘ஆதி புரூஷ்’ படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் மட்டும்தான். பரபரப்பாக பேசப்படும் இந்த கதையில் சிறிதளவும் உண்மை இல்லை. இது யாரோ ஒருவரின் கற்பனை. இவர்கள் பரப்பும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

Most Popular

Recent Comments