HomeNewsKollywoodஅஸ்வினை இயக்கும் அருள்நிதி பட இயக்குனர்

அஸ்வினை இயக்கும் அருள்நிதி பட இயக்குனர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்நிதி நடிப்பில் வெளியான படம் தேஜாவு. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்த படத்தை அரவிந்த் சீனிவாசன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் பத்திரிகை துறையில் இருந்து சினிமாவில் நுழைந்து தன்னை இயக்குனராக மாற்றிக் கொண்டவர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் பிரபல நடிகர் நவீன் சந்திராவை வைத்து ரிப்பீட் என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.

இந்தநிலையில் சமீபத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகி பாராட்டப்பட்ட செம்பி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த குக் கோமாளி புகழ் அஸ்வின் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்க உள்ளார் அரவிந்த் சீனிவாசன்.

ரொமான்டிக் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்த படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ‘தேஜாவு‘ மற்றும் ‘செம்பி‘ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து அரவிந்த் ஶ்ரீனிவாசன் மற்றும் அஸ்வின் இணைவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments