V4UMEDIA
HomeNewsKollywoodதனுஷுக்கு நன்றி தெரிவித்த சூரி

தனுஷுக்கு நன்றி தெரிவித்த சூரி

தொடர்ந்து முன்னணி நகைச்சுவை நடிகராக படங்களில் நடித்து வந்த சூரி ஒரு கட்டத்தில் கதையின் நாயகனாக புரமோஷன் பெற்று தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதியும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகர் தனுஷ், இளையராஜா இசையில் உன்னோடு நடந்தா என்கிற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த பாடல் எனக்கு அமைந்தது என் அப்பா அம்மா செய்த புண்ணியம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் சூரி.

இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “என் அப்பா அம்மா செய்த புண்ணியம்.. என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் இசைஞானி இளையராஜா அய்யாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு.. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும் பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடித்தந்த தனுஷ் சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த படைப்பில் உங்களின் பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார்” என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார் சூரி.

Most Popular

Recent Comments