V4UMEDIA
HomeNewsKollywoodஅதியன் ஆதிரையின் இரண்டாவது படமாக உருவாகும் தண்டகாரண்யம்

அதியன் ஆதிரையின் இரண்டாவது படமாக உருவாகும் தண்டகாரண்யம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்கிற படம் வித்தியாசமான டைட்டிலுடன் வெளியாகி அதன் வித்தியாசமான கதை அம்சத்திற்காக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தை அதியன் ஆதிரை என்பவர் இயக்கியிருந்தார். இவர் இயக்குனர் பா ரஞ்சித்தின் சீடர். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது தனது இரண்டாவது படத்திற்கு தண்டகாரண்யம் என டைட்டில் வைத்து படத்தை இயக்கி வருகிறார் அதியன் ஆதிரை. இந்த படத்தையும் நீலம் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன், பாலசரவணன், ரித்விகா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முதல் கட்டமாக ஓசூர் மற்றும் சுற்றுவட்டார் மலைப்பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

பரியேறும் பெருமாள், ரைட்டர், சேத்துமான், குதிரைவால், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, நட்சத்திரம் நகர்கிறது சமீபத்தில் வெளியான பொம்மை நாயகி என வித்தியாசமான கதைக்களங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நீலம் புரொடக்ஷன்ஸ் படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் இந்த தண்டகாரண்யம், இதைத்தொடர்ந்து ஜே பேபி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.

Most Popular

Recent Comments