V4UMEDIA
HomeNewsKollywoodவடக்குப்பட்டி ராமசாமியில் சந்தானம் ஜோடியாக இணைந்த மேகா ஆகாஷ்

வடக்குப்பட்டி ராமசாமியில் சந்தானம் ஜோடியாக இணைந்த மேகா ஆகாஷ்

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதைத்தொடர்ந்து தமிழில் பேட்ட படத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது சந்தானம் நடித்து வரும் வடக்குப்பட்டி ராமசாமி என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மேகா ஆகாஷ். இந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்கி வருகிறார்.

நீண்ட நாட்களாக இந்த படத்திற்கு பொருத்தமான கதாநாயகியை தேடிக் கொண்டிருந்தோம் மேகா ஆகாஷ் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக வருவார் என முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த படம் 1960களில் நடப்பது போன்று ஒரு பீரியட் படமாக உருவாகி வருகிறது. சந்தானம் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார் என்று கூறியுள்ளார் இயக்குனர் கார்த்திக் யோகி.

மேலும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், நிழல்கள் ரவி, ரவி மரியா, ஜான் விஜய், சேசு, ஜாக்குலின் மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments