V4UMEDIA
HomeNewsKollywoodபெங்களூரில் எளிமையாக நடைபெற்ற கருணாஸ் மகள் திருமணம்

பெங்களூரில் எளிமையாக நடைபெற்ற கருணாஸ் மகள் திருமணம்

பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படம் மூலம் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். அதை தொடர்ந்து முன்னணி நகைச்சுவை நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்து, கதாநாயகனாக கூட சில படங்களில் நடித்தார்.

தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் கருணாஸ் ஒரு தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். அதுமட்டுமல்ல ஒரு பக்கம் அரசியலிலும் இறங்கி சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்த கருணாஸ் தனக்கென ஒரு தனி கட்சி அமைப்பை நடத்தி வருகிறார்.

கருணாஸின் மனைவி கிரேஸ் பின்னணி பாடகியாக இருந்து தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜ் ஆக பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இவர்களுக்கு கென் என்கிற மகனும் டயானா என்கிற மகளும் இருக்கின்றனர். இதில் கென் கருணாஸ் அசுரன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்,

அதேசமயம் மகள் டயானா மருத்துவம் படித்து டாக்டராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். மகளை சினிமா வெளிச்சம் பட்டுவிடாமல் வளர்த்த கருணாஸ், தற்போது அவரது திருமணத்தையும் பெங்களூரில் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பு இல்லாமல் எளிய முறையில் நடத்தி முடித்துள்ளார்.

தற்போது இந்த திருமண புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு உள்ளதன் மூலம் தான் அவரது மகள் திருமணம் நடந்ததே ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன. திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments