V4UMEDIA
HomeNewsKollywoodமீண்டும் கீதா கோவிந்தம் பட இயக்குனருடன் கைகோர்த்த விஜய் தேவரகொண்டா

மீண்டும் கீதா கோவிந்தம் பட இயக்குனருடன் கைகோர்த்த விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி என்கிற படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தாலும் அதன்பிறகு அவரும் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்த, ஒரு சேர சூப்பர் ஹிட் ஜோடி என ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுக்கொடுத்த படம் கீதா கோவிந்தம்.

அந்த படத்தில் இடம்பெற்ற இன்கெம் இன்கெம் காவாலே என்கிற பாடல் ரசிகர்களால் திரும்பத்திரும்ப விரும்பி கேட்கப்படும் பாடலாக மாறி இந்த ஜோடியை உச்சத்தில் கொண்டு போய் வைத்தது/ இவர்களுக்கு இவ்வளவு பெரிய பெயரும் புகழும் கிடைக்க காரணமானவர் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம். தெலுங்கு திரையரங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கிய பரசுராம் கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

ஸ்டார் தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இந்த புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். விஜய்யுடன் இணையும் இந்த படம் எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட இருக்கிறது.

நடிகர்கள், படக்குழுவினர் விவரங்கள் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த புரோமோஷனல் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்

Most Popular

Recent Comments