HomeNewsKollywood11 வருடங்களை ஒன்றாக கடந்த சிவகார்த்திகேயன்-துல்கர் சல்மான் 

11 வருடங்களை ஒன்றாக கடந்த சிவகார்த்திகேயன்-துல்கர் சல்மான் 

தமிழ் திரையுலகில் அதிகபட்ச வியாபார மார்க்கெட் உள்ள நடிகர்களின் வரிசையில் ரஜினி, விஜய் அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். திரையுலகில் நுழைந்து குறுகிய காலத்தில் இந்த உயரத்தை தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக கடந்த 2012ல் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்கிற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப்படம் வெளியாகி இன்றுடன் 11 வருடங்களை தொட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இந்த சாதனையை கொண்டாடி வருகிறார்கள். 

அதேபோல மலையாள திரையுலகில் செகண்ட் ஷோ என்கிற படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். பிரபல நடிகர் மம்முட்டியின் வாரிசாக இருந்தாலும் தனது நடிப்பு திறமையாலும் வித்தியாசமான கதை தேர்வினாலும் முன்னணி நடிகர்கள் வரிசைக்கு உயர்ந்தார் துல்கர் சல்மான்.

இன்று தமிழ், தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்கும் பான் இந்திய நடிகராகவும் மாறிவிட்டார். இவர் நடித்த செகண்ட் ஷோ திரைப்படமும் 11 வருடத்திற்கு முன்பு இதே தேதியில்தான் ரிலீஸ் ஆனது. 

அந்தவகையில் ஒரே நாளில் ஹீரோவாக அறிமுகமான இவர்கள் திரையுலகில் போட்டி நிறைந்த தற்போதைய சூழலில் இன்று வெற்றிகரமான ஹீரோக்களாக 11 வருடங்களை கடந்து வந்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய சாதனைதான்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments