V4UMEDIA
HomeNewsKollywoodசாகுந்தலம் படத்தில் சமந்தாவின் ஆடை அணிகலன்கள் குறித்த ஹைலைட்ஸ்

சாகுந்தலம் படத்தில் சமந்தாவின் ஆடை அணிகலன்கள் குறித்த ஹைலைட்ஸ்

வரலாற்று படங்களும் புராண இதிகாச படங்களும் தென்னிந்திய மொழிகளில் வருவது ரொம்பவே அரிதான ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில் அந்த குறையை போக்கும் விதமாக தற்போது நடிகை சமந்தா தெலுங்கு மற்றும் தமிழில் நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபுவை முன்னணி ஹீரோவாக உயர்த்திய ஒக்கடு படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் குணசேகர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் புராண இதிகாச கதையான சாகுந்தலத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

சகுந்தலாவாக சமந்தாவும் துஷ்யந்த மகாராஜாவாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்காக சமந்தா கிட்டத்தட்ட 30 கிலோ எடை கொண்ட ஒரு ஆடையை அணிந்து ஒரு வார காலம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தாராம். அதுமட்டுமல்ல மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களையும் அணிந்து இந்த படத்தில் சமந்தா நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

புராண காலபடம் என்பதால் இது போன்ற கெட்டப்பில் சமந்தா நடிக்க வேண்டி இருந்ததாம். இது குறித்த புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன

Most Popular

Recent Comments