V4UMEDIA
HomeNewsKollywoodகுரங்கு பொம்மை இயக்குனர் டைரக்ஷனில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்

குரங்கு பொம்மை இயக்குனர் டைரக்ஷனில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாரதிராஜா நடித்த குரங்கு பொம்மை என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் நித்திலன். வித்தியாசமான அதே சமயம் மனதை அதிர வைக்கக்கூடிய ஒரு படமாக இதை கொடுத்திருந்த நித்திலன் இதற்காக விமர்சன ரீதியாக அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார் நித்திலன்.

இந்த படத்தில் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்க முக்கிய வேடத்தில் நட்டி என்கிற நடராஜ் சுப்பிரமணியம் நடிக்கிறார். இவர்களுடன் முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

அதே சமயம் இந்த படத்தில் மிகவும் வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்று இடம்பெறுகிறது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் யார் என்கிற குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக இருக்கிறது.

அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தையையும் நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க கிரைம் மற்றும் த்ரில்லர் களத்தை கொண்ட ஆக்சன் படமாக இது உருவாக இருக்கிறது.

இந்த படத்தின் ஹைலைட் அம்சம் என்னவென்றால் கடந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜ்னீஸ் லோக்நாத் தான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இவர் ஏற்கனவே நித்திலன் இயக்கிய குரங்கு பொம்மை படத்திற்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல கைதி, மாநகரம், மாஸ்டர், தற்போது விஜய் நடிக்கும் தளபதி 67 ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றும் பிலோமின் ராஜ் தான் இந்த படத்தின் பட தொகுப்பையும் மேற்கொள்ள இருக்கிறார்.

Most Popular

Recent Comments