இயக்குனர் சங்கரின் சீடராக பணியாற்றி ராஜா ராணி படம் மூலம் தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாக துவங்கிய இயக்குனர் அட்லீ, தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை இயக்கி அவரது ஆஸ்தான இயக்குனராகவே மாறினார்.

இந்த வெற்றிகளால் அவருக்கு பாலிவுட்டிலும் வரவேற்பு கிடைத்து தற்போது ஷாருக்கான் நடித்த வரும் ஜவான் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.


இன்னொரு பக்கம் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அட்லீ. திருமணம் ஆகி பல வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது தான் முதன்முறையாக அட்லியின் மனைவி பிரியா கர்ப்பமாகியுள்ள தகவலை சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷமாக வெளியிட்டனர் இந்த தம்பதியினர்.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி உள்ளார்கள் அட்லீ பிரியா தம்பதியின.ர் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.